விளம்பரம் செய்வதை முதலில் நிறுத்துங்க... பதஞ்சலி நிறுவனத்தின் மீது பாய்ந்த ஆயுஷ் அமைச்சகம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பாபா ராம்தேவ்க்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் கொரோனாவைக் குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகப்படுத்தியது. கொரோனா ஆயுர்வேதக் கிட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மருந்து பெட்டியில் கொரோனில் மற்றும் ஸ்வாசரி என்ற ஆயுர்வேத மருந்து விற்பனை வரவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் NIMS பல்கலைக் கழகத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் 280 கொரோனா நோயாளிகளிடம் புதிய ஆயுர்வேத மருந்தை பரிசோதித்துப் பார்த்தாகவும் அதில் வெறுமனே 7 நாட்களில் கொரோனா முழுவதும் குணமடைந்து விடுவதாகவும் பாபா ராம்தேவ் அறிவிப்பு வெளியிட்டதை என்டிடிவி செய்தியாக நேற்று வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் மருந்து பற்றிய அறிவிப்பு வெளியான ஒரு மணிநேரத்திலேயே ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கொரோனா ஆயுர்வேத மருந்து பற்றிய முழுத்தகவல் மற்றும் கலவை முறைகளை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் விளம்பரம் செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தால் கடும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. பாபா ராம்தேவ் ஆயுர்வேத மருந்தை வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் விளம்பரம் செய்வதை நிறுத்துமாறு ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பாளர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா இந்த மருந்து முறையான ஆய்வுத்தரவுகளின் படி உருவாக்கப்பட்டது என்றும் 7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றை முழுமையாகக் குணப்படுத்துவதை பல முறை சோதித்து பார்க்கப் பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி வெளியிட்ட மருந்தைப் பற்றிய எந்த தகவல்களும் எங்களிடம் இதுவரை அளிக்கப்பட வில்லை எனத் தெளிவுப்படுத்தி இருக்கிறது. மேலும் அனைத்து தகவல்களையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறது. நேற்று செய்தி வெளியிட்ட பிடிஐ செய்தி நிறுவனம் ஹரித்வாரில் உள்ள பாபா ராம்தேவ்வின் தலைமை பீடத்தில் உள்ளவர்கள் மற்றும் சில மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புதிய ஆயுர்வேத மருந்து பரிசோதித்து பார்க்கப் பட்டது எனக் கூறியிருந்தது. அதில் 100 விழுக்காடு முமையான குணம் பெறமுடியும் எனவும் பதஞ்சலி தெரிவித்ததாகச் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் கொரோனில் மற்றும் ஸ்வாசரி ஆயுர்வேத மருந்து ICMR யிடம் இதுவரை ஒப்புதல் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலிகை கலந்த வீட்டு மருந்து, பாரம்பரிய மருந்து போன்றவை கொரோனா நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் எனக் கூறுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என WHO விளக்கம் அளித்து இருந்தது. இந்நிலையில் பாபா ராம்தேவின் கொரோனா ஆயுர்வேத மருந்து எந்த மருந்துக் கட்டுப்பாட்டின் ஒப்புதலையும் பெறாமல் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் “மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவ மனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சம் தெரிவித்து உள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசிடம் இந்த மருந்து உற்பத்திக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா எனவும் கேள்வியெழுப்பி அதற்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது ஆயுஷ் அமைச்சம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout