நீட் தேர்வில் அராஜகத்தின் உச்சகட்டம். உள்ளாடையை அகற்றி சோதனை செய்த கொடுமை

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

நேற்று இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாநகரங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளை சோதனை என்ற பெயரில் பெரும் அராஜகம் நடந்ததுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் தோடு, வளையல் ஆகியவைகளை அகற்றிய சோதனை செய்த அதிகாரிகள் மாணவர்களின் முழுக்கை சட்டைகளை கிழித்து அரைக்கை சட்டையாக்கினர். மேலும் அராஜகத்தின் உச்சகட்டமாக கேரளாவில் உள்ள கண்ணனூர் என்ற தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும், இதனால் மாணவ, மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளிகளை போல மாணவ மாணவிகளை சோதனை செய்து தேர்வுக்கு அனுமதிப்பதை பெற்றோர்கள் உள்பட பலர் கண்டித்தனர். இப்படி ஒரு தேர்வு எழுதி டாக்டர் ஆகவேண்டிய அவசியம் இல்லை என்பது ஒருசிலரின் குரலாக இருந்தது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் இல்லை, ஒரே மாதிரியான கல்வி இல்லை, ஒரே மாதிரியான கல்விக்கூடங்கள், வசதிகள் இல்லை, ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு, சோதனை என்ற பெயரில் அராஜகம் ஆகியவை நடந்துள்ளதை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர்.

More News

'பாகுபலி 2' சுனாமியிலும் தப்பிய தனுஷ்-தன்ஷிகா படங்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி இந்தியாவின் 90% திரையரங்குகளில் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தின் சுனாமி வசூல் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதையும், ஒருசில படங்களின் வசூல் அடிபட்டதும் அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பாட்ஷா' நாயகி திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகின்றனர். விரைவில் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன...

ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். 'பாகுபலி 2' வெற்றிக்கு பிரபாஸ் நன்றி

இந்திய திரையுலகில் ரூ.1000 கோடி வசூல் செய்த படம் கொடுத்த ஒரே நாயகன் என்ற பெருமையை பெற்றவர் 'பாகுபலி' புகழ் பிரபாஸ். இந்த படங்களின் இரண்டு பாகங்கள் வருவதற்கு முன்னர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், இந்த இரண்டு படங்களுக்கு பின்னர் உலகமே பேசும் நாயகனாகிவிட்டார்...

'பாகுபலி' போன்ற திரைப்படம் எடுக்க முடியுமா? ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

கடந்த பத்து நாட்களாக எங்கு பார்த்தாலும் 'பாகுபலி' படத்தை குறித்த பேச்சாகவே நாடு முழுவதும் இருந்து வருகிறது. ரூ.1000 கோடி வசூல் செய்த இந்திய படம், குறிப்பாக தென்னிந்திய படம் என்பது நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டிய ஒரு விஷயம்...

ரூ.1000 கோடி சாதனை செய்த 'பாகுபலி 2' படத்தின் கடந்த வார சென்னை வசூல்

இந்திய திரையுலகில் முதன்முறையாக ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் ரூ.2,65,48,750 வசூல் செய்தது என்பதை பார்த்தோம்