சைக்கிள் வாங்கும் பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த சிறுமிக்கு கிடைத்த வெகுமதி

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

 

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது. கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்தினர்களும் தங்களால் முடிந்த உதவியை கேரள சகோதர, சகோதரிகளுக்காக கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த அனுப்ரியா என்ற சிறுமி கடந்த நான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர் கொடுத்த பணத்தை உண்டியலில் போட்டு சிறுக சிறுக சேமித்து வந்தார். கிட்டத்தட்ட ரூ.9000 சேர்ந்து அவருடைய சைக்கிள் கனவு நனவாகும் நிலையில் அந்த தொகை முழுவதையும் அவர் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டார். தனது சைக்கிள் கனவு அழிந்தாலும் பரவாயில்லை, கேரள மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற சிறுமியின் பெருந்தன்மை சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் அனுப்ரியாவின் சைக்கிள் கனவையும், அதற்காக சேமித்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாகவும் கொடுத்ததை கேள்விப்பட்ட ஹீரோ சைக்கிள் நிறுவனம், அனுப்ரியாவுக்கு புத்தம் புதிய சைக்கிள் ஒன்றை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது. என்னதான் நாட்டில் குற்றங்கள் பெருகி வந்தாலும் இன்னும் மனிதத்தன்மை ஆங்காங்கே இருக்கின்றது என்பது இந்த இரண்டு நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளில் இருந்து தெரியவருகிறது.

 

More News

மீனவ ஹீரோக்களுக்காக முதல்வர் பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அம்மாநிலமே கிட்டத்தட்ட வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுபவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் ஆன போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று எவிக்சன் ஆகும் நபரை கமல்ஹாசன் அறிவிக்கவுள்ளார்

கேரள வெள்ள நிவாரண நிதியாக அதிகபட்சம் கொடுத்த விக்ரம்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு கோலிவுட் திரையுலகினர் கடந்த சில நாட்களாக தாராளமாக நிதி வழங்கி வருவது தெரிந்ததே. 

மருத்துவமனையில் இருந்தபோதிலும் தேசப்பற்றை விடாத சீக்கியர்

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர் முன்னாள் ராணுவ வீரர் சர்தார் லாப்சிங் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

முடிவுக்கு வந்தது கனமழை: வெதர்மேன் அறிவிப்பால் கேரள மக்கள் நிம்மதி

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் கேரளாவில் பெய்து வந்த கனமழையால் அம்மாநில மக்கள் இதுவரை சந்தித்திராத பேரிடரை சந்தித்துள்ளனர்.