சைக்கிள் வாங்கும் பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த சிறுமிக்கு கிடைத்த வெகுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது. கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்தினர்களும் தங்களால் முடிந்த உதவியை கேரள சகோதர, சகோதரிகளுக்காக கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த அனுப்ரியா என்ற சிறுமி கடந்த நான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர் கொடுத்த பணத்தை உண்டியலில் போட்டு சிறுக சிறுக சேமித்து வந்தார். கிட்டத்தட்ட ரூ.9000 சேர்ந்து அவருடைய சைக்கிள் கனவு நனவாகும் நிலையில் அந்த தொகை முழுவதையும் அவர் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டார். தனது சைக்கிள் கனவு அழிந்தாலும் பரவாயில்லை, கேரள மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்ற சிறுமியின் பெருந்தன்மை சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் அனுப்ரியாவின் சைக்கிள் கனவையும், அதற்காக சேமித்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாகவும் கொடுத்ததை கேள்விப்பட்ட ஹீரோ சைக்கிள் நிறுவனம், அனுப்ரியாவுக்கு புத்தம் புதிய சைக்கிள் ஒன்றை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது. என்னதான் நாட்டில் குற்றங்கள் பெருகி வந்தாலும் இன்னும் மனிதத்தன்மை ஆங்காங்கே இருக்கின்றது என்பது இந்த இரண்டு நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளில் இருந்து தெரியவருகிறது.
Dear Anupriya, We appreciate your gesture to support humanity in the hour of need. You would get a brand new cycle from us. Please DM your address or contact us at customer@herocycles.com. @PankajMMunjal
— Hero Cycles (@Hero_Cycles) August 19, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout