காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண். காப்பாற்றிய கூகுள்

  • IndiaGlitz, [Monday,January 09 2017]

காதலன் கைவிட்டதால் வெறுப்படைந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது அவரை கூகுள் காப்பாற்றிய நெகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது
உ.பி மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணின் காதலர் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாக காதலியை கைவிட முடிவு செய்தார். இதனால் மனம் உடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்து முடிவு செய்து எளிதான வழிகளில் தற்கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடியுள்ளார்.
ஆனால் இதுபோன்ற தேடலுக்கு கூகுள் வழிகாட்டுவதற்கு பதிலாக தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வருவதற்கான எண்களையே காட்டும். இதை அறியாத அந்த இளம்பெண் அதில் கிடைத்த ஒரு எண்ணை தேர்வு செய்து டயல் செய்தார்.
அவரது தொலைபேசிய அழைப்பை எடுத்த உ.பி மாநிலத்தின் துணை ஐ.ஜி., ஜிதேந்திர குமார் சாஹி என்பவர் அப்பெண்ணிடம் பரிவுடன் பேசி தனது அலுவலகத்திற்கு வரச்சொன்னார். பின்னர் அந்த பெண்ணின் கதையை கேட்டு, அவருக்கு தகுந்த ஆலோசனைகள் கூறியதோடு மகளிர் காவல் நிலைய பெண் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து மேலும் கவுன்சிலிங் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
தற்போது அந்த பெண் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவருடைய காதலரை வரசெய்து அவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தூள்ளது.

More News

ஜல்லிக்கட்டு தடை குறித்து கமல்ஹாசன் கருத்து

பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக 'ஜல்லிக்கட்டு' நடத்தி வருவது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி அதிமுக உறுப்பினர் ஜோசப் தொடர்ந்த வழக்கின் விசாரணை சற்று முன் நடந்தது.

ரஜினியின் ஆசி, ஆஸ்கார் விருதைவிட மேல். ஆர்.கே.சுரேஷ்

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸில் முந்திய படம் எது?

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கடந்த வார நிலை குறித்து தற்போது பார்ப்போம்

விக்ரம்-கவுதம்மேனனின் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் பற்றிய அறிவிப்பு

கவும்தம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் நாள்தோறும் மாலை 6 மணிக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றது.