போலீஸ் காரில் லிப்ட் ஏறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி, தமிழகத்தில் ரோஜா என சமீப காலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெண் எம்பிகளை இது குறித்து ஆவேசமாக பேசினர். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் நாட்டுக்கே தலை குனிவு என்றும், பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களின் ஆண்மைத் தன்மையை நீக்க வேண்டும் என்றும், பொது இடத்தில் அடித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் பேசி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் தற்போது மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிலும் டிஸ்மிஸ் போலீஸ் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வேலியே பயிரை மேய்ந்ததாக கருதப்படுகிறது
ஒடிசா மாநிலத்தில் பூரி என்ற பகுதியில் பேருந்தின் வருகைக்காக இரவில் ஒரு பெண் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ஒருவர் அந்தப் பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாகவும் தானும் ஒரு போலீஸ்காரர் என்பதால் பயப்படாமல் ஏறி கொள்ளவும் என்றும் தனியாக இந்த இரவு நேரத்தில் நிற்கவேண்டாம் பாதுகாப்பு இருக்காது என்று கூறியதை அடுத்து அவரை நம்பி அந்த பெண் காரில் ஏறியுள்ளார்
காரில் ஏறிய பின்னர் தான் அந்த காரில் மேலும் மூவர் இருந்தது. இதனை அடுத்து தன்னுடைய கிராமத்தை நோக்கி கார் செல்லாமல் வேறு பக்கமாக சென்றதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்த கார் பூரி பகுதிக்குச் சென்று ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் அந்த இளம்பெண்ணை நால்வரும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இதனையடுத்து அந்த பெண் குற்றவாளிகளில் ஒருவர் ஒருவரது ஐடி கார்டை எடுத்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த ஐடி கார்டை சோதனை செய்து பார்த்தபோது குற்றவாளிகளில் ஒருவர் டிஸ்மிஸ் ஆன போலீஸ் என்பதும் அவர் சிலர் ஒருசில குற்றத்திற்காக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது தெரியவந்தது
இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். டிஸ்மிஸ் ஆன போலீஸ்காரர் ஒருவரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments