குளிக்கும்போது ஆபாசப்படம் எடுத்ததால் தீக்குளித்த 10ஆம் வகுப்பு மாணவி மரணம்

  • IndiaGlitz, [Wednesday,June 17 2020]

வேலூரில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த 3 இளைஞர்கள் அவரை மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தீக்குளித்த சம்பவம் குறித்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சற்றுமுன் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் துத்திபட்டு என்ற பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திறந்த வெளியில் குளிக்கும் போது மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து ஆபாச படம் எடுத்தனர். இதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் மொபைல் போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தங்கள் ஆசைக்கு இணங்குமாறும் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஏற்கனவே அவர் இது குறித்து விரிவாக போலீசிடம் வாக்குமூலம் கொடுத்ததால் கணபதி, ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி மரணம் அடைந்துள்ளதால் அவர்கள் மூவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

More News

தெருக்குத்தெரு புதிதாக முளைத்த மாஸ்க் வியாபாரிகள்!!! தரம் குறித்த அச்சம்!!!

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறையை வகுத்து இருக்கிறது.

மேலும் ஒரு திமுக பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதி: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீன எல்லை மோதலில் 20 இந்தியர்கள் வீரமரணம்: 43 சீன வீரர்கள் பலியானதாக தகவல்

இந்திய மற்றும் சீன எல்லையில் நேற்று இரவு இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் மூன்று இராணுவ வீரர்களும் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக

நோயை பரப்பும் திட்டத்துடன் சென்னையை சுற்றிய கொரோனாவால் பாதித்த இளைஞர்: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை அல்லது வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திய நிலையில்

புதுவைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை: முதல்வரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தில் உள்ளது