குளிக்கும்போது ஆபாசப்படம் எடுத்ததால் தீக்குளித்த 10ஆம் வகுப்பு மாணவி மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூரில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து வீடியோ எடுத்த 3 இளைஞர்கள் அவரை மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தீக்குளித்த சம்பவம் குறித்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சற்றுமுன் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் துத்திபட்டு என்ற பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திறந்த வெளியில் குளிக்கும் போது மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து ஆபாச படம் எடுத்தனர். இதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் மொபைல் போனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தங்கள் ஆசைக்கு இணங்குமாறும் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஏற்கனவே அவர் இது குறித்து விரிவாக போலீசிடம் வாக்குமூலம் கொடுத்ததால் கணபதி, ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி மரணம் அடைந்துள்ளதால் அவர்கள் மூவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com