சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம்: பிரபல இயக்குனர் மீது இளம்பெண் புகார்..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

சினிமாவில் வாய்ப்பு வருவதாக கூறி, பிரபல இயக்குனர் ஒருவரும் அவருடைய நண்பரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என, ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சில பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், தற்போது பிரபல இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவர் மீது, காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, விஜய் தன்னை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதேபோல் தன்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு இயக்குநர் சுரேஷ் திருவல்லா வலியுறுத்தியதாகவும் அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இந்த புகார், மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

'நானும் விஜய்யும் 'வேட்டையன்' படத்தை பார்த்தோம்: வெங்கட் பிரபு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி அன்று தளபதி விஜய் பார்த்தார் என்றும் அது குறித்த

இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை.. ஒரே ஒரு தீக்குச்சி போதும்: ஜெயம் ரவியின் அடுத்த பட அறிவிப்பு..!

நடிகர் ஜெயம் ரவி, தற்போது "ஜெனி", "பிரதர்”, 'காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு, வீடியோவுடன் வெளியாகி, இணையத்தில் வைரல்

மகிஷாசுரமர்த்தினி மந்திரம் : அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

அயிகிரி நந்தினி பாடல் வரிகள் தமிழில் | Aigiri nandini lyrics in Tamil

பிக்பாஸ் புரமோ: பஞ்சாயத்தை பேசி முடிங்க நாட்டாமை.. கொசுத்தொல்லை தாங்க முடியலை

விஜய் டிவியில் கடந்த ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பது தெரிந்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் சேதுபதி மகன்? மகனை எப்படி ட்ரீட் செய்வார் தந்தை?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மற்ற சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் முதல் நாள் முதலே விறுவிறுப்பு ஆரம்பித்து