கிரிஷ் கர்னாட்- கிரேசி மோகன் இணைந்து பணிபுரிந்த ஒரே படம்!

  • IndiaGlitz, [Monday,June 10 2019]

இன்று ஒரே நாளில் இரண்டு திரையுலக பிரபலங்கள் மரணம் அடைந்தது திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. தமிழ் உள்பட இந்தியாவின் முன்னணி மொழிகளில் குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த கிரிஷ் கர்னாட் மற்றும் தமிழ் திரையுலகில் நடிகர், கதாசிரியர், வசனகர்த்தாவாகவும், நாடகத்துறையில் உள்ளவருமான கிரேசி மோகன் ஆகிய இருவரும் இன்று இவ்வுலகில் இருந்து விடை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அபூர்வமாக கிரிஷ் கர்னாட், கிரேசி மோகன் ஆகிய இருவரும் 'ரட்சகன்' என்ற படத்தில் பணிபுரிந்துள்ளனர். நாகார்ஜூனா, சுஷ்மிதாசென் நடிப்பில் பிரவீண் காந்தி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாயகியின் தந்தையாகவும், வில்லனாகவும் கிரிஷ் கர்னாட் நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருந்தார்.

ரட்சகன் படத்தில் பணிபுரிந்த இரண்டு திரையுலக மேதைகள் இன்று ஒரே நாளில் மரணம் அடைந்திருப்பதும், இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்று இந்த படத்தை இன்று ஒளிபரப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

இந்திய அணியின் வெற்றியை அரைநிர்வாண போஸ் கொடுத்து கொண்டாடிய நடிகை

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

பிரபாஸின் 'சாஹோ' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களுக்கு பின் நடிகர் பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில்

ஆள் இருந்தால்தான் நட்பா? கிரேஸி மோகனுக்கு கமல்ஹாசன் இரங்கல்

நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் கிரேஸி மோகன் இன்று மதியம் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன்

உலகப்புகழ் பெற்ற ஹனிமூன் நகரத்தில் விக்னேஷ்சிவன் - நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலர்களாக உலகம் முழுவதும் அவ்வப்போது சுற்றி வருவது தெரிந்ததே

சத்தியம் மாறாது, சரித்திரம் சாயாது: பிரபல இயக்குனருக்கு கஸ்தூரி பதிலடி!

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.