இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரானின் 6 வயது மகன்! குவியும் வாழ்த்துக்கள்!
- IndiaGlitz, [Wednesday,November 11 2020]
சற்குணம் இயக்கிய ’வாகை சூட வா’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார், சமீபத்தில் வெளிவந்த ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்திற்கு அவரது இசை பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிப்ரானின் ஆறு வயது மகன் ஒரு பாடலை கம்போஸ் செய்து பாடியதாக ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘மாஸ்க்க காணும்’ என்று தொடங்கும் இந்த பாடலின் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ள ஜிப்ரான், இதன் முழு பாடல் குழந்தைகள் தின சிறப்பு பாடலாக நவம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.
ஜிப்ரானின் ஆறு வயது மகன் மழலை குரலில் பாடிய ‘மாஸ்க்க காணும் என்ற பாடலின் புரமோ அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், இந்த முழு பாடலை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களின் வாரிசுகள் இசைத்துறையில் ஜொலித்து வரும் நிலையில் ஜிப்ரானின் மகனும் எதிர்காலத்தில் இசைத்துறையில் சிறந்துவிளங்க வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Super excited in unveiling a small promo of #Mask’aKaanom, a song that my son composed on his own & sang????.
— Ghibran (@GhibranOfficial) November 11, 2020
Video Link: https://t.co/jexjFt1sN9
#Mask’aKaanom releases in @thinkmusicindia for Children’s day on 13th Nov…. Stay Tuned guys..✌️✌️ pic.twitter.com/fSiVqXqMm5