இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரானின் 6 வயது மகன்! குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Wednesday,November 11 2020]

சற்குணம் இயக்கிய ’வாகை சூட வா’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார், சமீபத்தில் வெளிவந்த ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்திற்கு அவரது இசை பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிப்ரானின் ஆறு வயது மகன் ஒரு பாடலை கம்போஸ் செய்து பாடியதாக ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘மாஸ்க்க காணும்’ என்று தொடங்கும் இந்த பாடலின் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ள ஜிப்ரான், இதன் முழு பாடல் குழந்தைகள் தின சிறப்பு பாடலாக நவம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.

ஜிப்ரானின் ஆறு வயது மகன் மழலை குரலில் பாடிய ‘மாஸ்க்க காணும் என்ற பாடலின் புரமோ அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், இந்த முழு பாடலை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர்களின் வாரிசுகள் இசைத்துறையில் ஜொலித்து வரும் நிலையில் ஜிப்ரானின் மகனும் எதிர்காலத்தில் இசைத்துறையில் சிறந்துவிளங்க வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

அசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி!

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின்  ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி

18 மணிநேரம் பேக்கப்பா ??? அசத்தும் புதிய லேப்டாப் அறிமுகம்!!!

கொரோனா காலத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களின் பயன்பாடு ரொம்பவே அதிகரித்து விட்டது.

கொரோனா காலத்தில் கோவிலை மட்டும் ஏன் திறக்குறீங்க… இந்த ஒரு கேள்விக்கு மரணத் தண்டனையா???

கொரோனா காலத்தில் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறந்திருப்பது ஏன் எனக் கேள்விகேட்ட தடகள வீரருக்கு மரணத்தண்டனை விதிக்கப்படலாம்

'இரண்டாம் குத்து' டீசரை நீக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக

நடிகை மைனா குழந்தையின் க்யூட் புகைப்படங்கள்: பெயரும் அறிவிப்பு!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மைனா கடந்த ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.