திருமண நாளில் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயன்ற இளம்பெண் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் வினிசைலா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு திருமண நாள் என்பதால் அதை கொண்டாட முடிவு செய்து இருவரும் தங்களது உறவினர்களுடன் பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்றனர்
நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஒருவரை ஒருவர் மோதிரம் மாற்றிக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் 11.50 மணிக்கே பீச்சில் இருவரும் உட்கார்ந்து 12 மணிக்கு காத்திருந்தனர். அலைகள் அந்நேரம் அவளுடைய கால்களை நனைத்து கொண்டு ரம்மியமாக இருந்தது
இந்த நிலையில் சரியாக 12 மணிக்கு வினிசைலா மோதிரத்தை எடுத்து தனது கணவருக்கு மாற்ற முயலும் போது திடீரென ஒரு ராட்சச அலை வந்து இருவரையும் அடித்து சென்றது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியதால் அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் விக்னேஷை மட்டுமே மீட்க முடிந்தது. மறுநாள் காலையில் பிணமாக வினிசைலா கரை ஒதுங்கினார்
முதலாவது திருமண நாளை கணவருடன் ஆசை ஆசையாய் கொண்டாட சென்ற வினிசைலா பிணமாக திரும்பியது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments