ஆட்டோ டிரைவரை பயமுறுத்தி பிராங்க் ஷோ: 6 இளைஞர்கள் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
பிராங்க் ஷோ என பொது மக்களை பயமுறுத்தும் வீடியோக்கள் தற்போது யூடியூபில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பதால் இதுகுறித்த வீடியோக்களை தயாரிப்பதில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவரை நள்ளிரவில் பேய்கள் வேஷமிட்டு பயமுறுத்திய 6 பேர் கொண்ட இளைஞர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் நள்ளிரவு 2 மணிக்கு யஸ்வந்த்பூர் என்ற பகுதி அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பேய் வேடமிட்ட மூன்று இளைஞர்கள் அந்த ஆட்டோவை நோக்கி ஓடிவந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆட்டோ டிரைவர் ரிவர்ஸ் எடுத்து மிக வேகமாகச் சென்றார்.
பின்னர்தான் இது பிராங்க்ஷோ என தெரியவந்தது. இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோவின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிராங்க்ஷோ எடுப்பது சட்டப்படி தவறு என்றும் இதுபோன்ற தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பெங்களூர் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout