இதுதான் உண்மையான சக்சஸ் மீட்.. 'கில்லி' விஜய்க்கு மாலை மரியாதை செய்த பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு நாள் ஓடிய படங்களுக்கு கூட போலியான சக்சஸ் மீட் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் 20 ஆண்டுகள் கழித்து ரிலீசான ‘கில்லி’ படத்திற்கு சக்சஸ் மீட் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ‘கில்லி’ திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் வசூல் சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து ‘கில்லி’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் திரையரங்குகளில் புதிய படங்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் அதேபோல் வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஒரு காட்சி, இரண்டு காட்சி ஓடிய படங்களுக்கெல்லாம் போலியாக சக்சஸ் மீட் நடத்தப்பட்டு வரும் நிலையில் உண்மையாகவே வெற்றி பெற்ற ‘கில்லி’ படத்திற்கு, அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்திற்கு சக்சஸ் மீட் நடத்தப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘கில்லி’ படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் மற்றும் ‘கில்லி’ படத்தின் விநியோகிஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் ஆகியோர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ‘கில்லி’ பட ரீரிலீஸ் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.
மேலும் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்த போவதாக விஜய் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சக்திவேலன், விஜய் இடம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு விஜய் புன் சிரிப்பை பதிலாக அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Today, @sakthivelan_b sir from Sakthi Film Factory had the pleasure of meeting Thalapathy @actorvijay to congratulate him on the massive blockbuster re-release of #Ghilli, brought to you by SFF. During the meeting, Sakthivelan Sir requested #ThalapathyVijay to consider acting in… pic.twitter.com/I4ym7zhxj0
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) April 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments