இதுதான் உண்மையான சக்சஸ் மீட்.. 'கில்லி' விஜய்க்கு மாலை மரியாதை செய்த பிரபலங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு நாள் ஓடிய படங்களுக்கு கூட போலியான சக்சஸ் மீட் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் 20 ஆண்டுகள் கழித்து ரிலீசான ‘கில்லி’ படத்திற்கு சக்சஸ் மீட் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ‘கில்லி’ திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் வசூல் சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து ‘கில்லி’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் திரையரங்குகளில் புதிய படங்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் அதேபோல் வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒரு காட்சி, இரண்டு காட்சி ஓடிய படங்களுக்கெல்லாம் போலியாக சக்சஸ் மீட் நடத்தப்பட்டு வரும் நிலையில் உண்மையாகவே வெற்றி பெற்ற ‘கில்லி’ படத்திற்கு, அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான படத்திற்கு சக்சஸ் மீட் நடத்தப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கில்லி’ படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் மற்றும் ‘கில்லி’ படத்தின் விநியோகிஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் ஆகியோர் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ‘கில்லி’ பட ரீரிலீஸ் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்த போவதாக விஜய் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சக்திவேலன், விஜய் இடம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு விஜய் புன் சிரிப்பை பதிலாக அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் இளம் நடிகர் ஹீரோவா? அப்ப சூர்யாவின் 'புறநானூறு' என்ன ஆச்சு?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் இந்த படம் சில காரணங்களால் தள்ளி போகும்

எங்க பார்த்தாலும் வடக்கங்க வேலைக்கு வந்துட்டாயிங்க... லிங்குசாமியின் 'வடக்கன்' டீசர்..!

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள 'வடக்கன்' என்ற திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள் - 12 ராசிகளுக்கான கணிப்பு (ஜோதிடர் ஆதித்ய குருஜி)

பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் 2024ம் ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.

மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், குறிப்பாக மேஷ

நாடாளுமன்ற அவையில் இதெல்லாம் வெத்து வேட்டு என துணிச்சலாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன்.

இதெல்லாம் வெத்து வேட்டு என பகிரங்கமாக தனது கருத்தை பதிவு செய்தார்.இவரது அஞ்சாத இந்த பேச்சும் யாருக்கு அசராத தன்மையும் அனைவரையும் அசர வைத்தது...