33வது பிறந்த நாளை கொண்டாடிய 'கில்லி' தங்கை நடிகை.. திருமணம் செய்யாததற்கு கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

தளபதி விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தனது 33 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜெனிபர். ‘கில்லி’ படத்திற்கு முன்பும் சரி அதற்கு பின்பும் சரி பல திரைப்படங்களில் ஜெனிஃபர். நடித்திருந்தாலும் ‘கில்லி’ படம் மட்டும் இன்னும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் மட்டுமின்றி ஒரு சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் 33 வயதாகும் ஜெனிஃபர். சமீபத்தில் தனது பிறந்த நாளை தனியாக கேக் வெட்டி கொண்டாடினார். ஜெனிபர் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். அதில், ‘என்னுடைய 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறேன், எனக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை, என்னுடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை முடிவு செய்வது நான்தான், எனது விருப்பம் போல என்னுடைய வாழ்க்கை வாழ்ந்து கொள்கிறேன், என்னைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் குறித்து எனக்கு கவலை இல்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.