'கில்லி' தான் நான் பார்த்த முதல் படம்: ரசிகரின் கேள்விக்கு பிரபல நடிகை பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஓய்வில் இருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களுடைய சமூக வலைப்பக்கத்தில் வேடிக்கையான வினோதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் ஒரு சில நடிகைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடி ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடினார்
அப்போது அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் திரையரங்கில் பார்த்த முதல் படம் எது? என்று கேட்டபோது அவர் அதற்கு பதில் கூறியதாவது: கில்லி என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பாவுடன் சென்று பார்த்தேன். சரியான பதில் வேண்டுமென்றால் என்னுடைய தந்தையிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் நடிகையான பிறகு அவர் படம் பார்ப்பதில்லை" என்று கூறியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தீவிர ரசிகை என்பதும் ’சர்கார்’ மற்றும் ’பிகில்’ ஆகிய படங்களில் நாயகியாக நடிக்க பரிசீலிக்கப்பட்டவர் என்பதும் ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு இந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்யின் அடுத்த படத்தில் அவர்தான் நாயகி என்று கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன
Gilli I think. My dad took me. ?? I don’t know you should ask him- He was a hugggeee movie buff back in the day. Now when I am an actor he’s not. ????
— Rashmika Mandanna (@iamRashmika) May 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments