'கில்லி' தான் நான் பார்த்த முதல் படம்: ரசிகரின் கேள்விக்கு பிரபல நடிகை பதில்

  • IndiaGlitz, [Monday,May 18 2020]

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஓய்வில் இருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களுடைய சமூக வலைப்பக்கத்தில் வேடிக்கையான வினோதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் ஒரு சில நடிகைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உரையாடி ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடினார்

அப்போது அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் திரையரங்கில் பார்த்த முதல் படம் எது? என்று கேட்டபோது அவர் அதற்கு பதில் கூறியதாவது: கில்லி என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பாவுடன் சென்று பார்த்தேன். சரியான பதில் வேண்டுமென்றால் என்னுடைய தந்தையிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் நடிகையான பிறகு அவர் படம் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யின் தீவிர ரசிகை என்பதும் ’சர்கார்’ மற்றும் ’பிகில்’ ஆகிய படங்களில் நாயகியாக நடிக்க பரிசீலிக்கப்பட்டவர் என்பதும் ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு இந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்யின் அடுத்த படத்தில் அவர்தான் நாயகி என்று கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன

More News

சொந்த ஊருக்கு சென்ற 'பேட்ட' நடிகர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருந்தார் நவாசுதீன் சித்திக்.

கொரோனா நேரத்தில் 4.0 இணையவழி தொழிற்துறை பட்டப்படிப்பு அறிமுகம்!!!

கொரோனாவின் தாக்கம் 2020 வரை இருக்கும், அதுவரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டி வரலாம் என்று அச்சமூட்டும் அறிவுரைகளுக்கு மத்தியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம்

கொரோனா நேரத்தில் கைவிரித்த நர்சுகள்!!! திணறும் மாநில அரசு!!!

மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவ மனைகளில் வேலை பார்த்து வந்த  300க்கும் மேற்பட்ட நர்சுகள் வேலையை விட்டு விட்டு தங்களது சொந்த மநிலங்களுக்கு சென்று விட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திரையரங்குகள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கோலிவுட் திரையுலகில் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது

இறைச்சிக்கு மாற்றாக உலக அளவில் பிரபலமாகி வரும் இந்தியப் பலாப்பழங்கள்!!!

கொரோனா ஊரடங்கினால் இந்திய பலாப்பழங்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.