இளையராஜா மகளுக்கு நன்றி கூறிய பிரபல இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா மட்டுமின்றி அவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இசையமைப்பாளர்களாகவும், அவரது மகள் பவதாரிணி பாடகியாகவும் இருந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் ஒரு பாடலை பவதாரிணி பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த பாடலை பாடிய பவதாரிணி குறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் 'நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் ரசித்து கேட்டுள்ளேன். இன்று உங்களுடன் இணைந்து ஒரு பாடலில் பணிபுரிந்துள்ளதில் பெரும் மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் இனிமையான குரலுக்கும் நன்றி' என்று பதிவு செய்துள்ளார்.
Always liked your #singing and glad to have a #recording with you. Thanks for giving your awesome voice @bhavatharini ☺#musicianlife #Singer #life pic.twitter.com/EgDq7sT3CL
— Ghibran (@GhibranOfficial) February 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com