என்னவொரு புத்திசாலித்தனம்? 4 ஆவது மாடியில் தொங்கியபடி க்ளீனிங்… பதற வைக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,February 25 2022]

உத்திரபிரதேச மாநிலம் காசியாபத் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெண் ஒருவர் ஜன்னலை சுத்தம் செய்வதற்காக 4 ஆவது மாடியில் தொங்கியபடி சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக ஹரியாணாவின் பரிதாபாத்தில் 9 ஆவது மாடியில் விழுந்த தனது சேலையை எடுப்பதற்காக பெண் ஒருவர் தன்னுடைய சொந்த மகனையே பெட்ஷீட்டில் கட்டி 10 ஆவது மாடியில் இருந்து தொங்கவிட்டார். இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அதே பரிதாபாத்தில் 12 ஆவது மாடியில் தொங்கியபடி ஒருவர் வொர்க் அவுட் செய்த வீடியோவும் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தற்போது மற்றொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலம் காசியாபத் நகரில் வசித்துவரும் பெண் ஒருவர் தன்னுடைய ஜன்னலை சுத்தம் செய்வதற்காக 4 ஆவது மாடியில் இருந்து ஜன்னலுக்கு வெளியே வந்து தொங்கியபடியே துணியை வைத்து வேகமாக ஜன்னலை துடைத்தெடுக்கிறார். இதற்கு அந்தப் பெண் எந்தப் பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை. மரணப் பயணத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை சம்பாதித்து இருக்கிறது.