ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ச்சியாக 4வது படத்தை இயக்கும் இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்த 'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், அதே தயாரிப்பாளருக்காக 'கஜினிகாந்த்' என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். ஆர்யா, சாயிஷா நடித்துள்ள இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ஒன்றை ஜெயகுமார் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ஆர்யா உள்பட 'கஜினிகாந்த்' படத்தில் பணிபுரிந்த பலர் மீண்டும் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவர் தொடர்ச்சியாக ஒரே தயாரிப்பாளருக்கு நான்கு படங்கள் இயக்கவுள்ளது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments