ஆர்யாவின் 'கஜினிகாந்த்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் 'கஜினிகாந்த்'. சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்ற இந்த படம் வரும் வெள்ளியன்று அதாவது ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் நாம் முன்னமே கூறியவாறு ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

ஆர்யா, சாயிஷா,, கருணாகரன், சதீஷ், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு. பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.பாலு ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.