'கஜினி 2' படத்தில் 2 ஹீரோக்கள், 2 கஜினிக்கள்? வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின், நயன்தாரா நடித்த ’கஜினி’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் 2008 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் ஹிந்தியில் அமிர்தான், அசின் உள்ளிட்டோர் நடித்த நிலையில், இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’கஜினி’ படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தமிழில் கஜினியாக நடித்த சூர்யா மற்றும் ஹிந்தியில் கஜினியாக நடித்த அமீர்கான் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் இரண்டு கஜினிகளா என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல் முறையாக சூர்யா மற்றும் அமிர்கான் இணைந்து ’கஜினி 2’ படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி வரும் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக சல்மான் கான் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்துவிட்டு ’கஜினி 2’ படத்துக்கு செல்வாரா? அல்லது ’கஜினி 2’ படத்தை வேறொரு இயக்குனர் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டிற்கு செல்வேன், ஏனெனில்... விஷால் பேட்டி..!

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரபல அரசியல் தலைவர்கள்

இந்திரஜா ரோபோ சங்கரின் 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா.. நெகிழ்ச்சி பதிவு.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார் என்ற தகவல் வெளியானது.

பிக்பாஸ் அக்ரிமெண்ட் இத்தனை பக்கங்களா? வாசிக்காமல் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ..!

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும், அந்த ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சம்பளம் கிடைக்காது

இந்த வார நாமினேஷன்.. சிக்கிய 4 பெண் போட்டியாளர்கள்.. யார் வெளியேற வாய்ப்பு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 15வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் அன்றைய எபிசோடின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாரா ரஜினிகாந்த்? முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் வீடு திரும்பினார் என்பதும்,