'கெத்து' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 24 2015]

ஒருகல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள அடுத்த படம் 'கெத்து'. திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், சத்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


'கெத்து' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பொங்கல் திருநாளில் விஷாலின் 'கதகளி', பாலாவின் 'தாரை தப்பட்டை' மற்றும் சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உதயநிதியின் 'கெத்து' படமும் தற்போது பொங்கல் போட்டியில் இணைந்துள்ளது. இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.