என் போன்ற நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் தீபிகாவுக்கு பிரச்சனைகள் வராது..! பாபா ராமதேவ்.
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள்மீது இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனால் தீபிகா படுகோனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர். சிலர் அவரது தைரியத்தை பாராட்டி இருந்தனர். பாஜகவினர் இது அவரது புது படத்ததுக்கான விளம்பரம் என்று கூறினார். தீபிகாவிடம் இது பற்றி கேட்டபோது, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் தனக்கு கோபம் வரவழைத்ததாகவும் ஆனால் இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ‘தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமித்துக் கொள்ள வேண்டும்’ என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும், சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு முன்பு தன்னிடம் ஆலோசனை பெற்றால் தீபிகா படுகோனுக்கு எந்த பிரச்சனையும் வராது’ என்றும் தெரிவித்தூள்ளார். "என்னை போன்ற நல்லவர்கள் ஆலோசனையை கேட்டு நடந்தால் தீபிகாவின் எதிர்காலத்திற்கு நல்லது " எனவும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout