என் போன்ற நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் தீபிகாவுக்கு பிரச்சனைகள் வராது..! பாபா ராமதேவ்.

  • IndiaGlitz, [Monday,January 20 2020]

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள்மீது இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனால் தீபிகா படுகோனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர். சிலர் அவரது தைரியத்தை பாராட்டி இருந்தனர். பாஜகவினர் இது அவரது புது படத்ததுக்கான விளம்பரம் என்று கூறினார். தீபிகாவிடம் இது பற்றி கேட்டபோது, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் தனக்கு கோபம் வரவழைத்ததாகவும் ஆனால் இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமித்துக் கொள்ள வேண்டும்’ என யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும், சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுப்பதற்கு முன்பு தன்னிடம் ஆலோசனை பெற்றால் தீபிகா படுகோனுக்கு எந்த பிரச்சனையும் வராது’ என்றும் தெரிவித்தூள்ளார். என்னை போன்ற நல்லவர்கள் ஆலோசனையை கேட்டு நடந்தால் தீபிகாவின் எதிர்காலத்திற்கு நல்லது எனவும் கூறியுள்ளார்.

More News

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய வேலையில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவின் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய மாதிரி வடிவம் வெளியீடு; 2024 க்குள் கட்டி முடிக்கத் திட்டம்

இந்திய நாடாளுமன்றம் வட்ட வடிவிலான கட்டிட அமைப்புடன் மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்!

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் சமூக வலைத்தளமாக பயனாளிகளுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே டுவிட்டர் இணையதளத்தில் கடுமையான வார்த்தைப்

வீடு முற்றுகை, உருவ பொம்மை எரிப்பு: தீவிரமாகும் ரஜினிக்கு எதிரான போராட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரியார்