அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்....! முதல்வர் ஆலோசனை...!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் பழனிச்சாமி. ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

• தமிழகத்தில் கொரோனா தொற்று 300,400 என்று குறைந்து வந்தது. ஆனால் இக்குறுகிய காலத்தில் வைரஸின் தாக்கம் பெரும்பாலானோரை பாதித்துள்ளது.

• பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் திருமண விழாக்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

• 2 வாரத்திற்குள் அரசு அலுவலர்கள் உட்பட அரசு ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

• தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு, முதலாளிகள் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்வது அவசியமாகும்.

• தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் மருத்துவமனையை அணுகினால் போதும், மருத்துவமனை ஊழியர்களே அங்கு வந்து தடுப்பூசி செலுத்துவார்கள்.

• காய்ச்சல் முகாம்களை சென்னையில் 400-ஆக உயர்த்த, சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

• உணவகங்கள், இறைச்சிக்கூடங்கள், சந்தைகள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பது நல்லது.

• தமிழகத்தில் தேவையான அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளதால், பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.

• தமிழகத்தில் சென்ற ஏப்ரல் மாதம்,10-ஆம் தேதி வரை சுமார் 37.80 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.