ரியல் ஹீரோக்களிடம் ஆட்டோகிராப் வாங்குங்கள்: சூரி வேண்டுகோள்
- IndiaGlitz, [Tuesday,May 12 2020]
இன்றைய நிலைகளில் ரியல் ஹீரோக்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தான். எனவே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி அவர்களை கெளரவப்படுத்துங்கள் என நடிகர் சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
கடந்த இரண்டு நாளைக்கு முன்னதாக என் மகளுடன் படிக்கும் பாப்பா ஒருவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், கொரோனா நேரத்தில் புகைப்படம் வேண்டாம் என்றும் கொரோனா முடிந்தவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினேன். அதற்கு அந்த பாப்பா ’ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்கள் என்று கூறினார். கண்டிப்பாக போட்டுத் தருகிறேன் என்று கூறி விட்டு ’உங்கள் அப்பா என்ன வேலை செய்கிறார்’ என்று கேட்டேன். அதற்கு அந்த பாப்பா காவல்துறையில் பணி புரிவதாகவும் கூறினார்
உடனே நான் ’நீ ஆட்டோகிராப் முதலில் வாங்க வேண்டியது என்னிடம் அல்ல, உன் தந்தையிடம் என்று கூறினேன். இந்த கொரோனா காலத்தில் ரியல் ஹீரோவாக இருப்பவர்கள் அவர்கள்தான். காவல்துறையினர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தியாக மனப்பான்மையுடன் பணிபுரிந்து வருகிறார்கள், அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தை பத்தாது, எனவே அவர்களை கவுரவப்படுத்த அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி சமூக வலைதளங்களில் வெளியிடுங்கள். இதுவே மிகப்பெரிய கவுரவமாக அவர்களுக்கு இருக்கும் என்று கருதுகிறேன். உங்களால் முடிந்தால் இதனை செய்யுங்கள் என்று சூரி ரசிகர்களுக்கு வேண்டுகோளாக கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி சூரி கடந்த இரண்டு நாட்களில் காவல்துறையினர்கள், மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆட்டோகிராப் வாங்கி அதையும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நிஜ ஹீரோக்களின் ஆட்டோகிராஃப் ????#AutographwithRealHeros
— Actor Soori (@sooriofficial) May 12, 2020
@chennaicorp @chennaipolice_ @IMAIndiaOrg @IASassociation #COVID19 pic.twitter.com/NvbjIoAZLv