200 ரூபாய் கொடுத்தால் போதும், நடிகை ஸ்ரேயாவுடன் டான்ஸ் ஆடலாம்

  • IndiaGlitz, [Sunday,May 03 2020]

200 ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு நிதி உதவி செய்தால் போதும் நடிகை ஸ்ரேயா சரணுடன் டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதன்படி 200 ரூபாய் கூகுள் பிளே மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தன்னுடன் நடனமாட வாய்ப்பு கிடைக்கும் என்று ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான தினக்கூலி தொழிலாளர்கள் பசியும் பட்டினியுமாக இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான் நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரேயா சரண் குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது

More News

ஓரினச்சேர்க்கை குறித்து அறிந்து கொள்ளவே இந்தியர்கள் விரும்புவதில்லை: பிரபல நடிகை

ஓரினச்சேர்க்கை மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவுமே இந்தியர்கள் முன்வருவதில்லை என்று பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா தமன்னா? வைரலாகும் வதந்தி

தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் நடித்து வரும் தமன்னா, இதுவரை திருமணம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்

கோயம்பேடு சந்தையால் 119 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 

சமீபத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நான்கு நாட்கள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நான்கு நாட்களுக்குரிய காய்கறிகள், மளிகைப்பொருட்களை

கொரோனா அச்சம்!!!10 ஆயிரம் சிறை கைதிகளை வீட்டிற்கு அனுப்பிய பிலிப்பைன்ஸ்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வடதுருவ ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை தானாக மூடிக்கொண்டது!!! அறிவியல் காரணங்கள் என்ன???

மனிதர்கள் ஏற்படுத்திய கடுமையான மாசுபாட்டால் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ஓட்டையை உண்டாகியிருந்தது.