கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்
- IndiaGlitz, [Monday,March 30 2020]
கொரோனா வைரஸ் உலகமெங்கும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது
கடந்த சில நாட்களாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. குறிப்பாக பங்குச் சந்தை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்
இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்ற அச்சத்தால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஜெர்மனி நாட்டின் நிதி அமைச்சகம் ஹெஸ் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 54 வயதான ஜெர்மனி நாட்டின் நிதி அமைச்சர் ஹெஸ் அவர்களின் உடல் ரயில் தண்டவாளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார சரிவை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து கடந்த 10 நாட்களாக இரவு பகலாக ஹெஸ் ஆலோசனை செய்து வந்ததாகவும் இருப்பினும் பொருளாதார பாதிப்பினை சரிசெய்ய வழியே இல்லாமல் இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பினை வெகுவிரைவில் சரிசெய்யாவிட்டால் கொரோனாவால் பலியாகி வரும் எண்ணிக்கையை விட கொரோனாவால் ஏற்படும் பொருளாதார சரிவால் ஏற்படும் மரணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.