தமிழக முதல்வரின் செயலால் வியப்பு… வெகுவாகப் பாராட்டிய ஜெர்மன் பத்திரிக்கை!

இந்தியாவிலேயே முதல் முறையாக மாநில முதல்வர் ஒருவருக்கு பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் வகையில் வல்லுநர் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் செய்கை பெரிதும் வரவேற்கத்தக்கது எனக்கூறி ஜெர்மன் பத்திரிக்கையான “தி ஃப்ராங்க்பர்ட்டர் அல்கெமின் ஜெய்துங்” எனும் நாளிதழ் தமிழக முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

முதலமைச்சருக்கு பொருளாதார விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன், பேராசிரியர் ஜீன் ட்ரஸ் ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்து இருக்கிறது.

இந்தச் செயலை அப்போதே பலரும் வியந்து பாராட்டி வந்தனர். இந்நிலையில் மாநில முதல்வருக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு இருப்பது வியப்பை அளிக்கிறது. அந்தக் குழுவில் பல தேர்ந்த வல்லுநர்கள் இருப்பது குறித்து வியந்து பேசிய ஜெர்மன் பத்திரிக்கை இது சமூக சீர்த்திருத்த முயற்சிகளில் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்து உள்ளது.

மேலும் ஜெர்மன் பத்திரிக்கை எழுதிய தனது கட்டுரையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பொருளாதார படிப்புகள் குறித்த குறிப்புகளும் அவர் அமெரிக்காவில் ஆற்றிய பணிகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.