அஜித்தின் ஆர்வம் குறித்து ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட தகவல்

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

தல அஜித் சமீபத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பிற்காக ஜெர்மனி சென்றபோது காலையில் படப்பிடிப்பிலும் மாலையில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள ஜெர்மன் விஞ்ஞானிகளை சந்தித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் முக்கிய நிறுவனமான 'வாரியர் ஹெலிகாப்டர்' என்ற நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்தின் ஆர்வம் குறித்த ஆச்சரிய தகவலை தெரிவித்துள்ளது. காலையில் படப்பிடிப்பிலும் மாலையில் எங்கள் அலுவலகத்திலும் அவர் மேற்கொண்ட பணி எங்களை ஆச்சரியப்படுத்தியது. வாரியர் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் இணைந்து ஆளில்லா ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அவர் கேட்டறிந்தார். ஏற்கனவே இந்திய, ஜெர்மனி நாடுகள் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அஜித்தின் இந்த முயற்சியால் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகரான பின்னர் அந்த புகழை வைத்து அரசியல், ஆட்சி, பதவி, பிசினஸ் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நடிகர்களின் மத்தியில் நாட்டு மக்களின் நலனுக்காக சிந்தித்து வரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

டிசம்பர் 21ல் வெளிவரும் 3 படங்களில் பணிபுரிந்த பிரபலம்

கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினங்களான டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஐந்து பிரபல நடிகர்களின் தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளது.

மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி நான்கே நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளது

ஜிவி பிரகாஷின் 'ஐங்கரன்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

கோலிவுட் திரையுலகின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

'பேட்ட' விஜய்சேதுபதியின் அட்டகாசமான கெட்டப்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயரும் கெட்டப்பும் இன்று மாலை வெளிவரவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்

தனுஷ்-விஜய்சேதுபதி போட்டியில் இணைந்த சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களிடையே போட்டி இருந்தாலும் இவர்களுடைய படங்கள் வெவ்வேறு நாட்களில் வெளிவந்ததால் இவர்களில் யார் வசூல் ஸ்டார் என்பது தெரியாமல் இருந்தது