வீட்டை விட்டு வெளியே வந்தால் இரண்டு வருடம் ஜெயில், 25000 அபராதம்: அதிரடி அறிவிப்பு 

  • IndiaGlitz, [Saturday,March 21 2020]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில நாடுகளில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் சிலர் சாலைகளில் நடந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மிகவும் அத்தியாவசிய தேவை தவிர தேவையில்லாமல் சாலைகளில் நடந்தால் அவர்களுக்கு இரண்டு வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் அது மட்டுமின்றி 25 ஆயிரம் ஜெர்மனி யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது போன்ற கடுமையான தண்டனை அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்