தளபதி விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜார்ஜியா ரசிகர்: வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தற்போது ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார் என்பதும் அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் மூன்று வாரங்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் படக்குழுவினர் சென்னை திரும்பி அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் ஜார்ஜியா வந்திருப்பதை அறிந்ததும் அங்கு உள்ள ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு முயற்சித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர் தளபதி விஜய்யை சந்தித்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி உள்ளார். விஜய் கையெழுத்திட்ட ஆட்டோகிராப்பை அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy #Vijay signs autographs for the diehard Georgia FANs. #Thalapathy65 @actorvijay @Vijay65TheFilm pic.twitter.com/Q3H6iK62Og
— #Thalapathy65 (@Vijay65TheFilm) April 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments