ஜார்ஜ் ஃபிளாட் மகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்ட பிரபல நடிகையின் கணவர்
- IndiaGlitz, [Thursday,June 18 2020]
சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாட் என்பவர் அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்து பல நாட்களாகியும் இன்னும் கருப்பின மக்களின் போராட்டம் வலுத்து வருவதால் கொரோனாவையும் மீறி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறைந்த ஜார்ஜ் ஃபிளாட் மகளின் 6 வயது மகளின் படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக பிரபல நடிகை மட்டும் மாடல் அழகி கிம் கர்தாஷியானின் கணவர் கான்யே வெஸ்ட் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் ஜார்ஜ் ஃபிளாட் அவர்களின் 6 வயது மகள் கியான்னா, கான்யே வெஸ்ட்டுக்கும் அவரது மனைவி கிம் கர்தாஷியானுக்கும் நன்றி கூறியுள்ளார். என்னுடைய படிப்பு செலவு முழுவதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு மிகவும் நன்றி. எனது தாயாரும் உங்களுக்கு நன்றி கூறியுள்ளார். எனது குடும்பமே உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கியான்னாவின் இந்த சமூக வலைத்தள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.