close
Choose your channels

'ஜென்டில்மேன் 2' படத்தின் முக்கிய பணி துவக்கம்.. கேரள அரண்மனையில் குவிந்த பிரபலங்கள்..!

Tuesday, July 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’ஜென்டில்மேன்’ என்ற திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

’ஜென்டில்மேன்’ முதல் பாகத்தை தயாரித்த கேடி குஞ்சுமோன் இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சேதன் சீனு என்பவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கார் நாயகன் எம்எம் கீரவாணி இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போசிங் பணி தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கேரளாவில் உள்ள ஒரு அரண்மனையில் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி, பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் . கலை இயக்குனரகளாக தோட்டா தரணியும் அவரது மகள் ரோகிணி தோட்டா தரணியும் பணியாற்றுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment