'ஜீனியஸ்' சென்சார் தகவல் மற்றும் ஆச்சரியமான ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயகக்த்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் வெறும் 98 நிமிடங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இம்மாதம் 26ஆம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில படத்திற்கு நிகரான ரன்னிங் டைமை கொண்டுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அறிமுக நாயகன் ரோஷன் இந்த படத்தில் நாயகனாக நடித்திருப்பதுடன் இந்த படத்தை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.