'பாக்காதே பாக்காதே' பாடலுக்கு ஆடிய நடிகையா இவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
- IndiaGlitz, [Friday,April 30 2021]
இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ’ஜென்டில்மேன்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை சுபஸ்ரீ. இந்த படத்தில் இவர் அர்ஜுனுடன் இணைந்து ’பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே’ என்ற பாடலுக்கு சூப்பராக நடனமாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை அடுத்து முத்து, தாய் தங்கை பாசம், ஆறுச்சாமி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிரபல கன்னட நடிகை மாலாஸ்ரீயின் சகோதரி என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது சகோதரி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஜென்டில்மேன் படத்தில் ’பார்க்காதே பார்க்காதே’ பாடலில் பார்த்த சுபஸ்ரீயா இவர்? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் அந்த புகைப்படத்தில் சுபஸ்ரீ உள்ளார்.