அதிமுக, திமுகவில் வாரிசு வேட்பாளர்கள்: ஒரு பார்வை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாரிசு அரசியல்வாதிகள் தலையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதில் அதிமுகவில் 4 வாரிசு வேட்பாளர்களும் திமுகவில் 7 வாரிசு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக வாரிசு வேட்பாளர்கள் விபரம்:
தேனி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் மகன் ரவீந்திரநாத் குமார்
தென் சென்னை - அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்
மதுரை - ராஜன் செல்லப்பா மகன் ராஜசத்யன்
நெல்லை - பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியன்
அதேபோல் திமுகவின் வாரிசு வேட்பாளர்களின் விபரம் பின்வருமாறு:
தூத்துகுடி: கருணாநிதியின் மகள் கனிமொழி
வடசென்னை: ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி
மத்திய சென்னை - முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன்
தென்சென்னை- தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன்
வேலூர் - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
கள்ளக்குறிச்சி - பொன்முடி மகன் கவுதம சிகாமணி
கடலூர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன் கதிரவன்
மேற்கண்ட வாரிசு பட்டியலில் தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் மற்றும் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேரடி போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com