பார் அருகே பிரபல நடிகர் சுட்டுக்கொலை.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

பிரபல ஹாலிவுட் நடிகர் தன்னுடைய காரில் திருட்டு போவதை தடுக்க முயற்சித்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’ஜெனரல் ஹாஸ்பிட்டல்’ என்ற டிவி ஷோ மூலம் பிரபலமடைந்த நடிகர் ஜானி வாக்டர். அதன் பிறகு பல வெப் சீரிஸ்களில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது வெளியே நிறுத்தப்பட்ட தனது காரில் மர்ம நபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதை பார்த்த நிலையில் உடனடியாக அவர் அந்த திருடர்களின் திருட்டை தடுக்க முயற்சித்தார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஜானி வாக்டரை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிகிறது. அவரது மரணத்தை அவரது தாயார் உறுதி செய்துள்ளார்.

ஜானி வாக்டர் மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 37 வயதான ஜானி வாக்டர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதும் ’ஜெனரல் ஹாஸ்பிட்டல்’ என்ற டிவி ஷோ மூலம் பிரபலமாகி அதன் பின்னர் பல சீரிஸ்களில் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.