கொரோனாவில் இருந்து குணமான விஜய் பட நாயகியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,September 01 2020]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ’பாய்ஸ்’ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த ’சச்சின்’ ’வேலாயுதம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா.

இவர் சமீபத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதித்ததாகவும், அதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து குணமாகியதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா முதல் முறையாக தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் வெளியில் சென்றுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கார் பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜெனிலியா நடந்து வரும் விதவிதமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.