உடைந்த கையிலும் “வாத்திங் கம்மிங்“ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட க்யூட் நடிகை… வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,March 13 2021]
பாலிவுட்டில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பெற்றவர் நடிகை ஜெனிலியா. இவர் தளபதி விஜய் நடித்த “சச்சின்“ படத்தில் ஷாலினியாக வந்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதோடு நடிகர் ஜெயம்ரவி நடித்த “சந்தோஷ் சுப்பிரமணியம்“ படத்தில் இவருடைய அட்டகாசமான க்யூட் நடிப்பை பார்த்து, இப்படி ஒரு காதலி நமக்கும் கிடைக்காதா? என இளைஞர்களை ஏங்க வைத்தார்.
இப்படி ஷாலினி, ஹாசினி என தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜெனிலியா அதற்குப் பின்பு “உத்தரமபுத்திரன்“, “வேலாயுதம்“ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். இதற்கு இடையில் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஜெனிலியா தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இரண்டு குழந்தைகள், க்யூட்டான கணவன் என சந்தோஷமான வாழ்க்கையை நடத்தி வரும் நடிகை ஜெனிலியா, சமீபத்தில் தன் குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டபோது விழுந்து வாரி கையில் எலும்பு முறிவை ஏற்படுத்திக் கொண்டார். அதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்த அவர், இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… மீண்டும் நான் ஸ்கேட்டிங் கற்றுக்கொள்வேன் எனத் தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக் கொண்டே கூறியிருந்தார்.
இப்படி எப்போதும் க்யூட் சிரிப்பு, கொட்டித் தீர்க்கும் உற்சாகம் என வலம் அவரும் அவர் தற்போது உடைந்த கையை வைத்துக் கொண்டு தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தன் நண்பர்களுடன் இணைந்து தளபதி விஜய் நடித்த “வாத்தி கம்மிங்“ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நம்மோட க்யூட் ஹாசினிக்கு வாழ்த்துகள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.