கணவர், குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு? விஜய் பட நாயகியின் உருக்கமான வீடியோ!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

தளபதி விஜய் நடித்த சச்சின் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் நடிகை ஜெனிலியா டிசோசோ. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையும் தெரிவித்து இருந்தார்.

இந்தத் தகவலை தற்போது அன்னையர் தினத்தை முன்னிட்டு மீண்டும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு காட்டிய அவர் “இதுபோன்ற நேரங்களில் ஒரு அன்னையாக இருப்பது சவாலான விஷயம். ஆனால் இதுபோன்ற நேரங்களில் ஒவ்வொரு அம்மாவும் மிகவும் வலிமையானவராக இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பான முறையில் வைத்து இருக்க வேண்டும். அதோடு மன வலிமையோடு இருப்பது மிகவும் முக்கியமான விஷயம். ஏனென்றால் ஒரே சமயத்தில் எனது இரு குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதைப்போல எனது கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

எனவே இதுபோன்ற சமயங்களில் ஒரு அன்னை வலிமையானவராக இருந்து அனைவரையும் வழிநடத்த வேண்டும். கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என உருக்கமாக வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் “பாய்ஸ்’‘ படத்தில் அறிமுகமான இவர் அடுத்து ஹாசினியாக “சந்தோஷ் சுப்பிரமணியம்”, ஷாலினியாக “சச்சின்” என இளைஞர்கள் மத்தியில் ஒரு குட்டி தேவதையாகவே வலம் வந்தார். தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் நடித்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ரியான், ரிஷி என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலில் ஜெனிலியாவிற்கும் அடுத்து அவரது இரு குழந்தைகள் அடுத்து கணவர் என ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து அனைவரும் மீண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.