ஜெமினிகணேசன் - சுருளிராஜனுக்கு இன்று முதல் 2வது இன்னிங்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,August 16 2016]

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டி.சிவா, அதர்வா நடிப்பில் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை அருகே உள்ள கொட்டிவாக்கம் என்ற பகுதியில் இந்த படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு அடுத்த சில நாட்களுக்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதர்வா, ரெஜினா, சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஓடம் இளவரசு இயக்கி வருகிறார். டி.இமான் இசையில் ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் ஒரு முழுநீள நகைச்சுவை படம் என்பது குறிப்பிடத்தக்கது.