'ஓடிப்போகலாமா' நடிகை கிரிஜாவை ஞாபகம் இருக்கின்றதா? நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’இதயத்தை திருடாதே’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கிரிஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான தெலுங்கு திரைப்படம் ’கீதாஞ்சலி’. கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் ’இதயத்தை திருடாதே’ என்ற தலைப்பில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் மற்றும் நாயகி ஆகிய இருவருமே மரணத்தை எதிர் நோக்கி ஒரு நோயினால் தவித்து வரும் நிலையில் ஏற்படும் காதல் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது
இந்த நிலையில் இந்த படத்தின் மிகச் சிறப்பாக நடிகை கிரிஜா நடித்திருந்தார் என்பதும் குறிப்பாக அவர் நாகார்ஜூனனிடம் ‘ஓடிப்போகலாமா’ என்று பேசும் வசனம் 90 கிட்ஸ்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு சில மலையாளம் மற்றும் படங்களில் நடித்த கிரிஜா அதன்பின் லண்டன் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு கன்னட படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ‘இப்பனி தப்பித இலேயல்லி’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரக்ஷித் ஷெட்டி தயாரிப்பில் சந்திரஜித் இயக்கும் இந்த படத்தில் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout