அரசியலில் இருந்து விலகும் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை, நடன இயக்குனர், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாக்குவாதம், மற்றவர்களை குற்றம் சொல்லும் அரசியல் இன்று அதிகரித்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ள இன்றைய அரசியலை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை.
தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு எதுவும் மாறுவது போல் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. எனவே எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்துவிட்டது. அரசியலில் விஸ்வாசமாக இருந்தாலும் கடைசியில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம்.
சினிமாவைவிட, அரசியலில் நடிகர்கள் அதிகம். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள் அதிகம் உள்ள அரசியலில் என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்பு உணர்வுடன் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். அதுவரை அமைதியாக வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தீவிர அரசியலுக்கு இது நேரமில்லை என்று எனக்கு தெரிகிறது. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout