உங்களை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க! காயத்ரியிடம் கண்ணீர் விட்ட ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் காயத்ரி மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பெஃக்ஷன் அறைக்கு சென்று பிக்பாஸ் அறிவுரையின்படி சமாதானம் ஆனார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் ஒரு புரமோவீடியோ வெளியாகியுள்ளது.
அதில் காயத்ரி வெளியில இருக்குற ஓவியா வேற மாதிரி இருந்தாங்க, பிக்பாஸ் வீட்டுல இருக்குற ஓவியா வேற மாதிரி இருக்காங்க, எதை நான் நம்புவது என்று கேட்க, அதற்கு ஓவியா, 'நீங்கள் காதால் கேட்கும் எதையும் நம்பாதீங்க, நீங்க கண்ணால் எதை பார்க்கின்றீர்களோ அதை நம்புங்கள். பர்சனலாக எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். என்னால உங்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்றுதான் உண்மையில் நான் நினைத்தேன். உங்களை ஏமாத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் என் வருத்தம்' என்று கூறி கண்ணீர் வடித்தார்.
அப்போது காயத்ரியும் நெகிழ்ச்சி அடைந்து ஓவியாவை கட்டிப்பிடிது அழாதே என்று ஆறுதல் கூறினார். இதுவரை எதிரும் புதிருமாக இருந்த ஓவியா, காயத்ரி தற்போது ஒன்று சேர்ந்துவிட்டால், காயத்ரியை நம்பி ஆட்டம் போட்ட ஜூலியின் நிலை என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com