காயத்ரி என்னை குழந்தை மாதிரி பார்த்து கொண்டார்: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெற்றியாளரான ஓவியாவுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஓவியாவின் கேரக்டர் கோடியில் ஒருவருக்கே இருக்கும் என்பதை பலரும் ஒப்புக்கொள்வதால் தான் அவருக்கு ஆதரவு பெருகி கொண்டே இருக்கின்றது. குறிப்பாக தன்னை டார்ச்சர் செய்தவர்களிடம் கூட அன்பு காட்டும் குணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வராது.
பிக்பாஸ் வீட்டில் தன்னை டார்ச்சர் செய்த ஜூலி, காயத்ரி, ஆரவ் ஆகியோர்கள் குறித்து வெளியே வந்தவுடன் அவர் எந்தவித எதிர்மறை கருத்துக்களையும் தெரிவிக்காதது அவர் மீதான மரியாதையை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஓவியா, 'காயத்ரி தன்னை ஒரு குழந்தை போல் பார்த்து கொண்டதாகவும், தன்மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார் என்றும் கூறியிருந்தார். காயத்ரி ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எந்த அளவுகு டார்ச்சர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் காயத்ரியை ஓவியா ஒரு தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மேலும் அந்த பேட்டியில் கடந்த காலம் குறித்து தான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை என்றும், தனக்கென்று எந்த ஒரு கனவும் இல்லை என்றும், தான் இதுவரை யாருக்கும் எதற்கும் பயப்பட்டதே இல்லை என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனது வாழ்க்கை ஒளிவுமறைவில்லாத ஒரு திறந்த புத்தகம் என்றும் அதில் ரகசியத்திற்கு இடமே இல்லை என்றும், தீபாவளி தினம் மட்டுமின்றி ஒவ்வொரு நாளையும் தீபாவளி போல் மகிழ்ச்சியாக இருப்பதே தனது குணம் என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments