ஜூலியின் ஆவேச வீடியோவுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

சமீபத்தில் பிக்பாஸ் ஜூலியும் அவருடைய ஆண் நண்பர்களும் காவல்துறை ஏட்டு ஒருவரை தாக்கியதாக வெளிவந்த செய்தி பரபரப்பு அடைந்தது. இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் உள்ள சில சைக்கோக்கள் ஜூலியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். ஒருசிலர் படுமோசமான கெட்ட வார்த்தையால் திட்டினர்

இந்த நிலையில் இதுகுறித்து ஜூலி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், என்னை மோசமாக திட்ட யார் நீங்கள்? என்னால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா? என்னால் உங்களுக்கு பணம் நஷ்டமா? ஒரு பெண்ணை மதிக்க முதலில் கற்று கொள்ளுங்கள்., அதுதான் தமிழர் நாகரீகம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பொய் சொன்னது உண்மைதான். ஆனால் பிக்பாஸ் எப்போதோ முடிந்துவிட்டது. அதனை வைத்து இன்னும் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டுவது நியாயமே இல்லை. அப்படியே இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு பொய் கூட சொன்னதே இல்லை என்பவர் மட்டும் என்னை திட்டுங்கள்

மேலும் எனக்கு ஆதரவாக கமெண்ட் அளித்தவர்களுக்கும் அட்வைஸ் செய்தவர்களுக்கும் நன்றி என்று ஜூலி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ஜூலியின் இந்த வீடியோ குறித்து கருத்து கூறிய நடிகை காயத்ரி ரகுராம், 'ஜூலி இதுகுறித்து உடனே காவல்துறையில் புகார் அளிக்கவும். அதற்கு நான் உதவி செய்கிறேன். இதுமாதிரி லூசுகளிடம் பேசி உன் நேரத்தை வீணாக்காதே! உன்னுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுபவர்களையும், மூளையில்லாத சைக்கோக்களின் கமெண்ட்டுகளை கண்டுகொள்ளதே. கடவுள் உன் பக்கம்' என்று கூறியுள்ளார்.